பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று எமது மனங்களிலேயே இருக்கிறது: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில் தான் இருக்கிறது என தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நேற்று (5) நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மனிதன் சூழலில் குவித்து வருகின்ற கழிவுகளில் இயற்கைக்கும் மனித உடல்நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற கழிவுகளில் பிளாஸ்ரிக் கழிவுகள் தான் முதலிடத்தில் உள்ளன.
ஆபத்து
மண்ணோடு மண்ணாக மக்கிப்போகாத இவை சூழலில் பன்னெடுங்காலம் நீடித்து இருக்கக் கூடியவை. நுண்துகள்களாக உணவுடனும், நீருடனும் சிறுகச்சிறுக எமது உடலினுள் நுழைந்து தேங்கி வருகின்றது. இவற்றை எரிக்கும்போது டையொக்சின் என்னும் நச்சுவாயு வெளியேறுகிறது.

இந்த நஞ்சு மனிதர்களில் புற்றுநோய்களையும், மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடியது. பிளாஸ்ரிக்கை முற்றாகத் தவிர்க்க முடியாமற்போனாலும் பிளாஸ்ரிக் பைகளையும் ஒரு நாள் பாவித்துவிட்டு வீசுகின்ற பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகள், உணவைப் பொதி செய்யும் பெட்டிகள் போன்றவைகளையும் நாங்கள் முற்றாகவே கைவிடலாம்.
மரக்கன்றுகள் நடுகை
சூழலில் குவியும் திண்மக் கழிவுகளில் இவற்றின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. இவற்றுக்கான மாற்றாகக் கடதாசிப்பைகளையும் துணிப்பைகளையும் பயன்படுத்தலாம். பிளாஸ்ரிக்கை கை பயன்பாட்டுக்கு பயன்பாட்டுக்கு வரும்வரைக்கும் வரும்வரைக்கும் நாங்கள் எல்லோரும் இவற்றைத்தானே பயன்படுத்தினோம்.

உண்மையில் இயற்கைக்கு இசைவான சூழல் நட்பு மிக்க பொருட்களைப் பயன்படுத்துபவர்களே நாகரிகமானவர்கள். நற்பண்புகளைக் கொண்டவர்கள். அந்த வகையில் பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்றை சந்தையில் தேடாமல் முதலில் எமது மனங்களில் மாற்றங்களைத் தேடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகளிடையே சூழல் தொடர்பான வினா விடைப் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam