யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

Jaffna Northern Provincial Council Sri Lanka
By Theepan Feb 10, 2023 05:50 AM GMT
Report

யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கலாசார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு | Allegation Of Deliberate Neglect

மக்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு

இந்த நிகழ்வின் நன்றியுரை வழங்குவதற்கு யாழ். மாநகர முதல்வருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அமைச்சர் ஒருவர் வேண்டுமென்றே மாற்றியிருக்கிறார் என அறிய வருகிறது. நிகழ்வொழுங்கில் யாழ். மாநகர முதல்வருக்குப் பதிலாக நன்றியுரைக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் இந் நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவின் தகவல் - ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் கலாநிதி எல். முருகன், இலங்கையின் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் “யாழ்ப்பாண கலாசார நிலையம்” இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கப்படவுள்ளது.

இந்த “யாழ்ப்பாண கலாசார நிலையம்” யாழ்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் இந்திய அரசாங்கத்தின் முற்றும் முழுதுமான நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப கட்டத்தில் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இதன் நிர்மாணப் பணிகளின் முடிவில் அதன் நிர்வாகத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு | Allegation Of Deliberate Neglect

மாநகர முதல்வர் விசனம்

எனினும் யாழ். மாநகர சபையின் இயலுமையைக் காரணங்காட்டி அதனை மத்திய புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு வந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வுக்கான சகல ஒழுங்குகளையும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வடக்கு மாகாண சபையுடனேயே இணைந்து மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாண கலாசார நிலையத்தை முகாமை செய்வதற்கான பங்காளர்களுள் ஒருவராக யாழ். மாநகர சபையும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நிகழ்வு ஏற்பாடுகளில் யாழ். மாநகர சபை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழில் கூட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவருடைய பெயரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பில், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கடுமையாகத் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு | Allegation Of Deliberate Neglect

யாழ். மாநகர சபை

இதன் பின்னரே, திரைநீங்கம் செய்யப்படவிருக்கும் நினைவுக் கல்லில் யாழ். மாநகர முதல்வரின் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, யாழ். மாநகர முதல்வர் நிகழ்வொழுங்கின் நன்றியுரையை வழங்கவும் ஏற்பாடாகியிருந்தது.

எனினும் இன்று காலை, ஜனாதிபதியின் யாழ். விஜயம் குறித்த ஏற்பாடுகளுக்கான முன்னாயத்த மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து யாழ். மாநகர முதல்வருக்குப் பதிலாக நன்றியுரைக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்பதை எமது செய்திச் சேவை நம்பகரமாக அறிந்து கொண்டது. 

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US