முன்பதிவு அவசியம்! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச்சேவைகளுக்கும் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து சேவைகளும் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவுகளை அதிகரிக்க நடவடிக்கை
இதனடிப்படையில், 0112 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது dmtappoinments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ பொதுமக்கள் தமது நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக, 2026.11.23 க்கு முன்பு வழங்கப்பட்ட தினசரி முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கையை இருமடங்குக்கும் மேலாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்பை விட அதிகமான வாடிக்கையாளர்கள் தினசரி அடிப்படையில் விரைவாகவும் எளிதாகவும் சேவைகளைப் பெற முடியும் என தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யும் முறை
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.
தொலைபேசி மூலம் - 011 2 117 116 என்ற எண்
இணையம் மூலம் - https://dmtappointments.dmt.gov.lk அல்லது https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுதல்.
அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி காலை முதல் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலக வளாகத்திற்கு அருகில் தேவையற்ற வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் நேரச் சேமிப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்பதிவு முறையைப் பின்பற்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.