ரஷ்யா பயணமாகும் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் நாளை ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார்.
Indian Ocean Rim Association அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவர் என்ற ரீதியில், அவர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருதரப்பு சந்திப்புகள்
“நியாயமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ், ரஷ்யா இம்மாநாட்டை நடத்தவுள்ளது.
மேலும் வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த குழுவினருடன், இருதரப்பு சந்திப்புகளை நடத்துவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam