கனேடிய மக்களுக்கு சில சந்தேக நபர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் (Canada) சில சந்தேக நபர்கள் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுத முனையில் வீடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து சந்தேக நபர்கள் மீதும் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பாரியளவில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் புகைப்படங்கள்
கடந்த ஆண்டில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுவதோடு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 37 பாரிய குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சந்தேக நபர்கள் மேலும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |