கனடாவிலிருந்து பிரிவது குறித்த அல்பர்ட்டா மாகாணத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு
எண்ணெய் வளம் மிக்க அல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தனி நாடாகச் செல்வதா என்பது தொடர்பிலான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை இன்று(19.10.2026)நடத்துகிறது.
எனினும், பிரிவினைவாத ஆதரவாளர்களுக்குத் தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த விவாதம் இத்துடன் முடிவுக்கு வராது என்றே பலரும் கருதுகின்றனர்.
அல்பர்ட்டா வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் கனடாவிலிருந்து பிரிவதற்கு எதிர்ப்பாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார முறைப்பாடு
50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மாகாணத்தில், பொருளாதார முறைப்பாடுகளும் கவலைகளுமே சுதந்திர இயக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

அங்கஸ் ரீட் ( Angus Reid ) கருத்துக் கணிப்பின்படி, 66வீத மக்கள் தமது மாகாணம் கனடாவிலேயே தொடர வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதேவேளை 5 இல் 3 பேர் பிரிவினைவாத இயக்கம் ஒருபோதும் முடிவுக்கு வராது என நம்புகின்றனர்.
அமெரிக்காவின் சுங்க வரிகள்
அமெரிக்காவின் சுங்க வரிகள் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் அழுத்தங்களுக்கு இடையே கனடாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள பிரதமர் மார்க் கார்னி அல்பர்ட்டாவிலேயே வளர்ந்தவர் என்பதால், கனடாவுடன் இணைந்திருக்குமாறு வலியுறுத்தி தேசியப் பெருமையை முன்வைத்துத் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

கூட்டாட்சி அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள், பழமைவாதக் கட்சியால் நிர்வகிக்கப்படும் அல்பர்ட்டாவின் எண்ணெய் தொழிலைக் கட்டுப்படுத்துவதாகவும், தாங்கள் நாட்டிற்கு வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பிற்கு ஏற்ப பலன்களைப் பெறுவதில்லை என்றும் பிரிவினைவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், மாகாண வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் டேனியல் ஸ்மித் ( Danielle Smith ) இத்தகைய வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.