யாழ்.அல்லைப்பிட்டியில் கோர விபத்து : பெண் ஒருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துக்கும் முச்சக்கரவண்டிக்கும் இடையிலான விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(19.10.2026) முற்பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் அதே மார்க்கமாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.