ரஷ்ய வெளியுறவு அமைச்சர்- ஈரான் அமைச்சருடன் அவசர பேச்சுவார்த்தை
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் டெஹ்ரான் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் வளைகுடாப் பிராந்தியப் பதற்றங்களைக் தணிப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இன்று தெஹ்ரான் சென்றடைந்த லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார்.
பேச்சுவார்த்தைகள்
இந்தச் சந்திப்பில் ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தைகள் மற்றும் வளைகுடா பிராந்தியப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் இடம்பெற்றன.

வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பின்மை ஏற்படுவதற்கு அமெரிக்கா-இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என ஈரானிய அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதன்போது குற்றம்சாட்டினார்.
ரஷ்யாவுக்கு எதிரான எதிர்கால தடைகளை தளர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு கைமாறாக ஈரானுடன் பேசி, அதனை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைக்கும் வகையிலேயே ரஷ்யாவின் இந்த முனைப்பு பார்க்கப்படுகிறது.