உயிரியல் துறையில் மூன்றாவது முறையாக பரீட்சை எழுத சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி
குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
குளியாப்பிட்டியில் பிரதான வீதியில் மயக்கமடைந்து விழுந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நகரவாசிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
உயிரியல் துறையில் மூன்றாவது முறையாக பரீட்சை எழுத வந்த மாணவர் ஒருவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மாணவனுக்கு நேர்ந்த கதி
பேருந்திற்கு பணம் செலுத்தச் சென்றபோது, பணப்பை காணாமல் போனதை உணர்ந்ததாக மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒருவர் உடனடியாக தலையிட்டு விண்ணப்பப் படிவத்தின் நகலை ஒன்லைனில் பெற உதவியுள்ளார்.
அதே நேரத்தில், ஒருவர் விரைவாக மாணவனுடன் சேர்ந்து, பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே வசிக்கும் சமாதான நீதிவான் ஒருவரிடம் கையொப்பத்தைப் பெற்று, மாணவனை பரீட்சைக்கு அனுப்பி வைத்தார்.
எனினும் மாணவர் மீண்டும் சிரமப்படுவதைத் தடுக்க, சமாதான நீதிவான் சம்பா ஏகநாயக்க மாணவருக்கு பணம் கொடுத்து, புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட ஸ்டுடியோவிற்கு அனுப்பினார்.
அந்த நேரத்தில், அவர் நகரத்தின் நடுவில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று, பேருந்துகளில் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam