யோசித ராஜபக்சவின் பாதையில் சென்ற நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...
யோசித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் பயிற்சி கேடட் அதிகாரியாக சேர்த்துக் கொள்வதற்காக ஆட்களை இணைத்துக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகள் குறைக்கப்பட்டே இணைத்துக் கொள்ளப்பட்டார்.
அதே வழியிலேயே நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்.
அடிப்படை தகுதிகள் குறைக்கப்பட்ட விதம்
நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய பல அடிப்படைக் கல்வித் தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டம் மற்றும் பல தொழில்முறை தகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தொழில்முறை தகுதிகளின் முக்கிய நிபந்தனை, உச்ச நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

மேலும், பொது அல்லது தனியார் துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மனிதவள முகாமைத்துவம், பொது நிர்வாகம், வணிக மேலாண்மை போன்ற எந்தவொரு துறையிலும் சிரேஷ்ட பதவியில் குறைந்தது 10 ஆண்டுகள் பொறுப்புகளை வகித்திருக்க வேண்டும்.
மேலும், முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக இருத்தல், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் குறித்து சிறந்த அறிவு பெற்றிருத்தல்.
அரசு நிர்வாகம் மற்றும் நிதி விதிமுறைகள் பற்றிய புரிதல் பெற்றிருத்தல், சர்வதேச உறவுகளில் அனுபவம் ஆகியவை சிறப்புத் தகுதிகளாக கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும், சமிந்த குமார குலரத்ன இந்தப் பதவிக்கு பொருத்தமான எந்த அடிப்படைக் கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்கவில்லை.இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தில் அரசியல் பதவிகளை மட்டுமே வகித்துள்ளார்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam