உயர்தர வகுப்புக்கள் இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புக்கள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே உயர்தர வகுப்புக்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாக உள்ளது.
உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து யோசனைக்கு அமைச்சரவை கடந்த மே மாதம் 14 ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, பரீட்சார்த்தமாக கொழும்பு ஆனந்த கல்லூரியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை
இன்று காலை 7.45 மணிக்கு உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை பிரதான நிகழ்வு ஆனந்த கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் சில காலங்களில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் போது மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலம் தாழ்த்தாது உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதன் மூலம் மாணவர்கள் உரிய முறையில் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
