போதிய பயணிகள் இல்லை: இரத்துச்செய்யப்பட்ட சென்னை- கட்டுநாயக்க விமானங்கள்
போதிய பயணிகள் வருகை இல்லாததால் ஒரே நாளில் சென்னைக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 4 விமான சேவைகள் முழுமையமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.10 மணி மற்றும் மாலை 3.05 மணியளவில் 2 சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவிருந்தன.
எனினும் இந்த விமானத்தில் பயணிக்க போதிய பயணிகளின் வருகை இல்லாத காரணத்தினால் 2 விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
சுற்றுலா பயணிகள்
அத்துடன், சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு அதிகாலை 3.10 மணி மற்றும் மாலை 4.10 மணியளவில் இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவிருந்தன.
எனினும் இந்த விமான சேவைகளும் போதிய பயணிகள் வருகை இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி இன்று மொத்தம் 4 விமான சேவைகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டன.
தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளமையும் இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri