ரணில் எவரையும் பழிவாங்கவில்லை: அகிலவிராஜ் தெரிவிப்பு

Akila Viraj Kariyawasam Ranil Wickremesinghe Sri Lankan political crisis UNP
By Rakesh May 01, 2023 04:05 PM GMT
Report

பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பயணத்தை மேற்கொண்டார், அவர் யாரையும் பழிவாங்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் படிப்படியாக முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01.05.2023) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் எவரையும் பழிவாங்கவில்லை: அகிலவிராஜ் தெரிவிப்பு | Akila Viraj About Ranil Wickremesinghe

'2048 வெல்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய தேசியக் கட்சி

கடந்த வருடம் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் இக்கட்டான நேரத்தில் மே தினத்தைக் கொண்டாடியது. 1956 தேர்தலில் தோல்வியடைந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. 1970 இல் ஐக்கிய தேசியக் கட்சி புதைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

ரணில் எவரையும் பழிவாங்கவில்லை: அகிலவிராஜ் தெரிவிப்பு | Akila Viraj About Ranil Wickremesinghe

1988 இல் ஜே.வி.பியினர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். 1993 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எமது முன்னாள் தலைவர்களை வெடிகுண்டுகளால் அழிக்க முயன்றனர்.

2020 இல் கட்சியை இரண்டாகப் பிரித்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர்.ஆனால், இன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது. இறுதியில், எங்கள் கட்சியின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.

எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கட்சி

இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் அந்தச் சவாலை ஏற்க முன்வரவில்லை.இன்று அவர் இந்த நாட்டைப் படிப்படியாக முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார்.

ரணில் எவரையும் பழிவாங்கவில்லை: அகிலவிராஜ் தெரிவிப்பு | Akila Viraj About Ranil Wickremesinghe

 பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவர் யாரையும் பழிவாங்கவில்லை.

இந்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, 2048 இல் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அவர் தோள் கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US