மே தினத்தில் சஜித்தின் சபதம்-செய்திகளின் தொகுப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் உள்நாட்டு யுத்த நிலைமையின் போதும் இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாகியுள்ளது.
இந்நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எம்மால் வழங்கப்படக் கூடிய கௌரவமாகும்.
அடுத்த ஆண்டு ஜூன் 23ஆம் திகதி அவரது நூறாவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,