செல்பி வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித் ரோஹண!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும், முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹணவின் உடல்நிலை தொடர்பில் போலி தகவல்கள் மற்றும் காணொளி, புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றது.
அஜித் ரோஹண கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஜித் ரோஹண, தாம் உடல்நலத்துடன் இருப்பதாக செல்பி படமொன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த நிலையில், ”நான் நலமாக உள்ளேன். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வீடுதிரும்ப முடியும் என தெரிவித்தனர். எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக குறிப்பிட்டு வேறொரு நபாின் புகைப்படம் பகிரப்பட்டுவந்தது அது நான் தான் என நினைத்த பலர், விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என குறித்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
