அஜித் ரோஹணவின் உடல்நிலை குறித்து அவரே இன்று வெளியிட்டுள்ள தகவல்
கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் உடல்நிலை தொடர்பில் இன்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அஜித் ரோஹணவை ஊடகமொன்று தொடர்பு கொண்டுள்ள நிலையில் தனது உடல்நிலை தொடர்பில் அவரே பதிலளித்துள்ளார்.
அதன்படி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், தான் பூரண குணமடைந்துள்ளதாகவும், இன்னும் சற்றுநேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உணர்ந்த முதல் சந்தர்ப்பத்திலேயே சிகிச்சை பெறுவது மிக கட்டாயமானது என வலியுறுத்தியுள்ள அவர் அதனை தான் செய்ததன் காரணமாகவே தான் இன்று கோவிட்டிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தொற்றினை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ள அவர் மேலும் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு தனது பணிகளை மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார்.





ட்ரோன் அத்துமீறல் ஐரோப்பியர்களுக்கு போர் அபாயத்தை நினைவூட்டியிருக்கும்: ரஷ்யா வெளிப்படை News Lankasri
