மூன்று மாதங்களில் அரசுக்கு ஏற்படவிருந்த ஆபத்து...அஜித் பி. பெரேராவின் பகிரங்கம்
பாரிய சிக்கலில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (22.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மூன்று மாதங்களில் அரசுக்கு ஏற்படவிருந்த ஆபத்து
கல்வி சீர்திருத்தங்களில் உள்ள தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டா விட்டால்,மூன்று மாதங்களில் அரசாங்கம் கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும்.
நாட்டிற்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் கல்வி சீர்திருத்தங்கள் முன்னே கொண்டு செல்லப்பட்டன.
தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டவில்லை என்றால், அரசாங்கம் மூன்று மாதங்களில் கடும் சிக்கலுக்கு முகம்கொடுத்திருக்கும்.மேலும் அரசு மீதமுள்ள 9 மாதங்களுக்கான கையேடுகளை தயாரிக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி வழங்கவில்லை.

தொழில்நுட்ப உபகரணங்களும் இல்லை. எனவே, எதிர்க்கட்சியின் காரணமாகவே அரசாங்கம் கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று குற்றம் சாட்டுவது தவறு.
எனவே, அரசாங்கத்தின் திறமையின்மையை மறைக்க மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களை நிறுத்திவிட்டு, முறையான சீர்திருத்தங்களை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam