மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விசர் நாய் - குழந்தைகள், பெண்கள் பாதிப்பு
வடக்கு களுத்துறையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 11 பேரை நாய் கடித்துள்ளதாகவும் களுத்துறை நகர சபையின் சுகாதார பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த பகுதியில் சுமார் ஒரு வாரமாக வெறி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் தெருநாய் சுற்றித் திரிவதாகவும், அதனாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
களுத்துறை கெலிடோ வீதியில் உள்ள நீதவான் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தங்கியுள்ள இந்த நாய், வீதியில் செல்பவர்களை கடிக்கத் தொடங்கியுள்ளது,
மக்கள் அச்சம்
தற்போது அந்தப் பகுதியால் செல்ல மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய் கடியால் காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam