அமெரிக்க விமானத்தின் என்ஜினில் திடீரென வெளியேறிய புகையினால் பரபரப்பு
அமெரிக்கா (United States) சிகாகோவின் ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமானது சியாட்டில் நகருக்கு புறப்பட்ட போது திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதன் என்ஜினில் திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ கட்டுப்பாடு
விமானத்தின் இறக்கைகளில் ஒன்றில் இருந்து புகை வெளியேறியமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த 148 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
#WATCH : United Airlines flight catches fire just before takeoff halting arrivals at Chicago O'Hare International Airport#UnitedAirlines #Chicago #ChicagoOHareInternationalAirport #FlightFire #BreakingNews #AirbusA320 pic.twitter.com/8mifG1i4KT
— upuknews (@upuknews1) May 28, 2024
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this