முப்பது கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த “அகுலனே கூடு சன” என்பவருக்குச் சொந்தமான முப்பது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை
நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை குடு அஞ்சுவின் நெருங்கிய உறவினரான "அகுலனே குடு சானா" மற்றும் சந்தேக நபரின் தாயார் (குடு ஸ்ரீமதி), சந்தேகநபரின் மனைவி மற்றும் சகோதரர் (அகுலனே பொடி மான்) ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது
இந்நிலையில், குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan