உக்ரைன் - ரஷ்ய போர் முனையில் சிக்கியுள்ள இலங்கையர்கள்
உக்ரைன்-ரஷ்யா போரில் கலந்து கொண்டு ஆதரவற்ற நிலையில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் முடிந்தவரை தலையிடும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர்களில் சிலர் ஏற்கனவே சுற்றுலாவிற்கு சென்றுவிட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரினால் வாக்குமூலங்கள் பதிவு
இந்த தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக இதுவரை 451 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், 301 பேரிடம் இது தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |