உலகளாவிய விமான நிறுவனங்களின் இணையச்சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது
உலகளாவிய விமான நிறுவனங்கள், வங்கிகளின் இணையச்சேவைகள் என்பன தொழில்நுட்ப கோளாறுகளின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையச் சேவை வழங்கும் Akamai Technologies அமைப்பின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால், உலகின் பல முக்கியமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டன.
இம்மாதத்தில் உலக அளவில் பெரிய வலைத்தளங்கள் முடங்கிப்போனது. இது இரண்டாவது முறையாகும். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த பிரச்சினைக்குக் காரணம், Domain name system (DNS) சேவையில் ஏற்பட்ட பிழை என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், வலைத்தளங்கள் வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் Akamai அதிகாரிகள் தெரிவித்தனர். அது, இணையத் தாக்குதல் அல்ல என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர்.
மீண்டும் இத்தகைய கோளாறு நேரமலிருக்கத் தேவையான மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளைப் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Akamai Technologies மேகக் கணிமை நிறுவனத்தின் கட்டமைப்பை, விமான நிறுவனங்கள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தனிநபர் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படுத்தி வருகின்றன.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam