சில பகுதிகளில் குறைவடையும் காற்றின் தரம்: உடன் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தல்
இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம்
அந்த அறிக்கையில் மேலும், நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று (17.02.2025) காற்றின் தரம் மிதமான அளவில் காணப்பட்டது. இன்று (18.02.2025) காற்றின் தரம் 44 தொடக்கம் 116 க்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலும், இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் சற்று ஆரோக்கியமற்ற நிலை இருக்கும் என்பதை குறிக்கின்றது.
காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்று தரக் குறியீடு
நாட்டின் சில நகரங்களில் காற்று தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்திற்குள் சிறிது ஆரோக்கியமற்றதாக இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி... உக்ரைன் நாடே மிஞ்சாது: கோபத்தின் உச்சத்தில் டொனால்டு ட்ரம்ப் News Lankasri
