உலகை உலுக்கிய கோர விமான விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணி
இந்தியாவில் இன்று ஏற்பட்ட கோர விமான விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் வேளையில் விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்து
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார் என்பவரே உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விமானத்தில் 169 பேர் இந்தியர்களும் 53 பேர் பிரித்தானிய பிரஜைகளும் ஒரு கனடிய நாட்டவரும் ஏழு போர்த்துகீசிய நாட்டவரும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ramesh Viswashkumar, The sole survivor of the Air India crash escaped by jumping from the plane. He was on seat number 11A. #AirIndia #AhmedabadNews #Gujarat #PlaneCrash #ITReel pic.twitter.com/NsMBeZOkbX
— IndiaToday (@IndiaToday) June 12, 2025
இதேவேளை குறித்த கோர விபத்தில் விமான பயணிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் இந்தியாவுக்கு சொந்தமான Boeing 787-8 விமானம் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான விடுதி மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாமையினால், அங்கிருந்த மாணவர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
