பணமோசடி வழக்கில் சிக்கிய உக்ரைன் ஜனாதிபதியின் முன்னாள் உதவியாளர்
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் முன்னாள் தலைமை அதிகாரியான ஆண்ட்ரி எர்மாக், சுமார் 10.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
உக்ரைனின் அரசு அணுசக்தி நிறுவனமான 'எனெர்கோஆட்டம்' நிறுவனத்தில் நடந்த ஊழல் பணத்தை மறைமுகமாகப் பயன்படுத்தி, கீவ் நகருக்கு அருகில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்புத்திட்டத்தில் முதலீடு செய்ததாக அவர் மீது அரசுத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை
இந்த வழக்கில் எர்மாக்கை நீதிமன்றக்காவலில் வைக்க கோரியுள்ள வழக்கறிஞர்கள், அவருக்கு சுமார் 4 மில்லியன் டொலர் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று ஆண்ட்ரி எர்மாக் மறுத்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட தான், எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனது பெயருக்கும் புகழுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க சட்டரீதியாகப் போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தற்போது ரஷ்யாவுடனான போரில் ஈடுபட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியைத் தொடர்ந்து பெற அந்நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் எர்மாக் மீதான இந்த விசாரணை, உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening