ஏர் இந்திய பயணத்தை புறக்கணிக்க தொடங்கும் பிரபலங்கள்..
நான் இனி ஒருபோதும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏர் இந்தியா நிறுவனம் அதன் மீதான பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டுக்களை புறக்கணிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் டேவிட் வோர்னர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அகமதாபாத் விபத்து
கடந்த 12ஆம் திகதி அன்று, அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் உட்பட விமானம் மோதிய கல்லூரி மாணவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதில் விமானத்தில் இருந்த 241 பேரும் பல்கலைக்கழக மாணவர்கள் 33 பேரும் அடங்குவர்.
விமானம் சுமார் 625 அடி உயரத்தில் நிலைத்தன்மையை இழந்து, புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் வேகமாக கீழே விழுந்து, அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதித் தொகுதியில் மோதியது.
சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், 40 வயதான பிரித்தானிய நாட்டவரான விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர் அவசரகால வெளியேற்றத்திற்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் காயங்களுடன் இடிபாடுகளில் இருந்து தப்பினார்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இதற்கிடையில் ஏர் இந்தியாவின் விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.
you may like this..





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
