இந்திய விமான விபத்தில் சிக்கிய மாணவர்கள் குறித்து வெளியான தகவல்!
புதிய இணைப்பு
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் ஒரு பகுதி அந்நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் உணவக பகுதியின் மேல் விழுந்ததில் குறைந்தது ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் திவ்யான்ஷ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விபத்து நடந்த நேரத்தில் பல்கலைக்கழக உணவகத்தில் இருந்த சுமார் 50 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, விபத்துக்குள்ளான கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிலர் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதுடன் அவர்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துளள்ளார்.
மேலும், மருத்துவமனையில் உள்ள எங்கள் மாணவர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தின் போது விமானம் மோதி பல்கலைக்கழக விடுதியில் இருந்த 20 மருத்துவ துறை மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் பல்கலைக்கழக விடுதியில் சுமார் 50 - 60 பேர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், விபத்தில் விடுதியில் இருந்த மாணவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பல்கலைக்கழக விடுதி
இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் 130இற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த போயிங் 787-8 விமானம் 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.
மேலும், அதில் ஒரு பயணி மாத்திரம் உயிர் பிழைத்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் முன்னெடுக்கப்பட்டது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
