பிராந்தியப் பிரச்சினைகளுக்கான உடன்பாடுகள் எளிதில் சாத்தியமில்லை: கத்தார் வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது விவாதிக்கப்பட்டு வரும் பிராந்தியப் பிரச்சினைகளுக்கு அவ்வளவு எளிதில் தீர்வு காண முடியாது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் பரஸ்பர ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், அரசு சாரா ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தற்போதைய முரண்பாடுகளாக நீடித்து வருவதாகக் கத்தார் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தோஹாவில் செய்தியாளர்களிடம் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாஜெத் அல்-அன்சாரி, "பிராந்தியப் பாதுகாப்பை நோக்கிய சரியான பாதையில்தான் நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏவுகணைத் திட்டங்கள்
எதிர்காலத்தில் பல சவால்கள் காத்திருந்தாலும், தற்போதைய சாதகமான சூழலை நாம் நம்பிக்கையுடன் அணுக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதி, பிராந்தியப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடன் ஈரானின் நல்லுறவு மற்றும் பல தசாப்தங்களாக இப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் ஆதரவுக் குழுக்கள் போன்ற பல்வேறு சிக்கலான விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் விரிவாகப் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய ஆழமான மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெறும் சில நாட்களில் பேசித் தீர்த்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தில் முழுமையான அமைதியை நிலைநாட்ட இன்னும் தொடர் முயற்சிகள் தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.