பொது மோசடியில் வயது என்பது எவரையும் பாதுகாக்காது! ஜனாதிபதி அநுர
பொது மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வயதான பெண்மணி மீதான விசாரணைகள் தொடர்பில் கூறப்படும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பதில் வழங்கியுள்ளார்.
பொது நிதி பிரச்சினைக்குள் இருந்தால், வயது என்பது யாரையும் சட்டத்தில் இருந்து பாதுகாக்காது என்று அவர் கூறியுள்ளார்.
பொது மோசடி
காலியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, திருடப்பட்ட பொதுப் பணத்தை யார் வைத்திருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில், தனிநபர் இளைஞரா அல்லது வயதானவரா என்பது கவலையில்லை. ஆனால் மோசடி செய்த பேரக்குழந்தைகள் காரணமாகவே, குறித்த வயதான பெண்மணி இந்த சூழ்நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்.
திருடப்பட்ட நிதி அவர்களின் பாட்டியிடம் இருந்தால், அவரும் விசாரிக்கப்படுவார். அதேநேரம் முழு குடும்பமும் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் அனைவரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 14 மணி நேரம் முன்

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
