யாழ்.வடமராட்சியில் ஒரு தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (8) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில், 8 உரப்பைகளில் ஈரமான நிலையில் போதைப்பொருள் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படவுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கட்டைக்காட்டை சேர்ந்தவர் என்றும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொகை போதைப்பொருளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையின் பின் விடுதலை செய்யப்பட்டவர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
