குழந்தைகளுக்கான இருமல் மருந்து தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் 'மேரியன் பயோடெக்' என்ற நிறுவனத்தின் தயாரிப்பான 'டோக்-1 மேக்ஸ்' என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது.
அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வில் வெளியான தகவல்
இதனைத் தொடர்ந்து, 'மேரியன் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் 'டோக்-1 மேக்ஸ்' மற்றும் 'அம்ப்ரோனால்' என்ற இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு பரிசோதித்தது.
அதில், இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபரில் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய இந்திய நிறுவனத்தின் மருந்து
இதற்கு, அரியானா மாநிலம், சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் உலக அளவில் இந்திய மருந்துகளின் நற்பெயர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
