ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான 29 வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன:சட்டமா அதிபர் பாதுகாப்பது மக்களையா ராஜபக்ச குடும்பத்தையா?
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் ஒன்றுக் கூடிய சட்டத்தரணிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் ராஜபக்ச குடும்பம் சம்பந்தப்பட்ட 29 வழக்குகளை திரும்பபெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சட்டமா அதிபர் மக்களின் குரலுக்கு செவிகொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மோசடியான ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான 29 வழக்குளை சட்டமா அதிபர் திணைக்களம் திரும்பபெற்றுள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்த அடிப்படையில் இந்த வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. அழுத்தங்கள் காரணமாக வழக்குகள் திரும்ப பெறப்பட்டனவா. இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த பல வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடினார்.
திரும்ப பெறப்பட்ட வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா, ராஜபக்சவினருக்கு எதிராக இருக்கும் ஏனைய வழக்குகள் திரும்ப பெறப்படுமா என குணரத்ன வன்னிநாயக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
''රාජපක්ෂ පවුලේ නඩු 29ක් ඉවත් කරගෙන''
— BBC News Sinhala (@bbcsinhala) April 8, 2022
''නීතිපති ආරක්ෂා කරන්නේ මේ පවුල ද? රටේ ජනතාව ද?'' pic.twitter.com/NnlevJG6lR
ராஜபக்சவினருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்குகளை சட்டமா அதிபரே முன்வந்து, அதில் குளறுபடிகள் இருப்பதாக கூறி திரும்ப பெற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் இதனை ஆடை அணிந்து கொண்டு செய்கின்றாரா என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து சட்டத்தரணிகளின் கோரிக்கைகளை எழுத்து மூலம் வழங்குமாறும் தான் அதனை சட்டமா அதிபரிடம் வழங்கி, பதில் பெற்று தருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சட்டத்தரணிகளிடம் உறுதியளித்துள்ளார்.



