போர் ஒன்று ஏற்பட்டால்... பாகிஸ்தானை மீண்டும் எச்சரித்த ஆப்கானிஸ்தான்!
போர் ஒன்று ஏற்பட்டால் ஆப்கானிஸ்தான் இளைஞர்களும் மூத்த குடிமக்களும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட தயாராக இருப்பார்கள் என ஆப்கானிஸ்தான் அமைச்சர் நூருல்லா நூரி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகினர்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தோல்வி
இவ்வாறு தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுவந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் அமைச்சர் நூருல்லா நூரி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்ற அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தோல்விகளிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam