தடுத்து வைக்கப்பட்ட ஏரோ லங்கா விமானம் - அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
விமான நிலையக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியதால் ஏரோ லங்கா விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஏரோ லங்கா டூர்ஸுக்கு சொந்தமான Boeing B-727-200-F ரக விமானம் ஒன்று, 280 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.
இந்த காரணத்தினால் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) குறித்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
CAASL தகவலின்படி, குறித்த விமானம் தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிடக் கட்டணங்களுக்காக 2026 மார்ச் 20ஆம் திகதி வரையில் ரூ. 284,473,729.10 தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட விமானம்
இதனையடுத்து, 2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்து சட்டத்தின் 101ஆம் பிரிவின் கீழ், விமானத்தை தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே சட்டப்பிரிவின் கீழ், நிலுவைத் தொகை செலுத்தப்படாத பட்சத்தில் அந்த விமானத்தை விற்பனை செய்யும் அதிகாரமும் CAASL-க்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை, அதனுடன் தொடர்புடைய செலவுகள், தடுத்து வைப்புக் கட்டணங்கள், சேமிப்பு கட்டணங்கள், நிர்வாகச் செலவுகள் மற்றும் சட்டச் செலவுகள் முழுமையாக மீட்கப்படும் வரை, Boeing விமானம் CAASL பாதுகாப்பில் வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துமாறு இறுதி அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.