பண்டிகை காலத்தில் தூர இடங்களுக்கு பயணிப்போருக்கான அறிவுறுத்தல்!
பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அவதானத்துடன் வாகனம் செலுத்துவதன் மூலம் திடீர் விபத்துக்களை தவிர்க்க முடியுமென விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்து
பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த புத்தாண்டு காலப்பகுதியில், 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்துக்களால், 75 முதல் 100 பேர் வரை உயிரிழந்ததாக பதிவாகிய தரவுகள் இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.