ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : கிண்ணியாவில் அநுர அளித்துள்ள உறுதி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று(12) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“அம்பாறையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள். நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள்.
விசாரணைகள் ஆரம்பம்
இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம்.
2019இல் ஈஸ்டர் தாக்குதலால் 250இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 21 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
