ஹரக் கட்டா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நடுன் சிந்தக, மாரடைப்பு காரணமாக நேற்று பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க 'ஹரக் கட்டா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததினையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் தப்பியோடியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஓராண்டுக்கும் மேலாக சிசிடிவி கருவிகள் செயல்படாமல் இருந்தமையே இதற்கான காரணமாகும். இந்த நிலையில் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது சிசிடிவி அமைப்பை சரிசெய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
'ஹரக் கட்டா' ச காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, அவருக்கு உதவியதாக கூறப்படும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள், சம்பவம் நடந்த உடனேயே இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இதேவேளை, குற்றத்தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா, அதிரடிப் படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கைத்துப்பாக்கியை அபகரித்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையின் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10ஆம் திகதி மாலை விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்த கைத்துப்பாக்கியை ஹரக்கட்டா பறிக்க முற்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
