பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பேருந்து சேவைகள் ஆரம்பம்-செய்திகளின் தொகுப்பு
பாடசாலை மாணவர்களுக்காக இன்று முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 741 சிசு செரிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு சிக்கலும் இன்றி, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு தேவையான பேருந்து சேவைகளை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று முதல் 90 தொடக்கம் 95 வீதமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக தேவையான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ சில்வா கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan