பிணையில் விடுதலையான நடிகை பியூமி ஹன்சமாலி தனிமைப்படுத்தலில்..
கொழும்பில் தனிமைப்படுதல் சட்டத்தை மீறி செயற்பட்ட நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிணையில் விடுதலையான சந்தேகநபர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற பிறந்தநாள் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.