நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை திறக்கப்படவுள்ளதால், அதிகளவான வாடிக்கையாளர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை,தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் தெரியப்பட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கூறினார்.



