இரணைமடுக்குளத்தின் கீழான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை
விவசாயிகளின் அழுத்தம் காரணமாகவும் அண்மையில் மேலதிகமாக கிடைக்கப்பெற்ற மழை காரணமாக கிடைக்கப்பெற்ற நீர்மட்டத்தை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் சரியான நீர் முகாமைத்துவத்தை அடிப்படையாக கொண்டும் இரணைமடுக்குளத்தின் கீழ் 16211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான குறிப்பிட்ட சில விவசாயிகள் நேற்றைய தினம் (07-02-2022) மேற்கொண்ட கவணயீர்ப்பு போராட்டத்தையடுத்து இன்று மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் சிறு போக பயிர்ச்செய்கைக்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நடைபெற்று பயிர்செய்கை அளவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக அதிகளவான நிலப்பரப்புகளை கொண்ட விவசாயிகள் தங்கள் நீர் பங்குகளை அதிகரித்துத் தருமாறு கோரி யிருந்தனர் அதற்கமைவாக மேலதிகமாக 426 ஏக்கர் இன்றைய தினம் இணைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் இரணை மடுக்குளத்தின் கீழ் 16211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது விவசாயிகளின் அழுத்தம் காரணமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளதுடன், அண்மையில் மேலதிகமாக கிடைக்கப்பெற்ற மழை காரணமாக குளத்தின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டும் விவசாயிகள் சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையிலும் குறித்த பயிர் செய்கை அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஏனைய தேவைகளையும் கணக்கிட்டு அதன்படியே விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
தொழில்நுட்ப ரீதியான ஆலோச னைகளை புறந்தள்ளி எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க முடியாது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07-04-2022)கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில விவசாயிகள் தங்களுக்கான நீர்ப் பங்கீடு சரியான முறையில் கிடைக்கவில்லை என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அதனையடுத்தே ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏற்கனவே இரணைமடு குளத்தின் கீழ் சிறு போக செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக 426 ஏக்கர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அந்த அடிப்படையில் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் 16211 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு போக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் மாவட்ட பிரதி நீர்பாசன பொறியியலாளர் இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் கமநல சேவைத் திணைக்களத்தின் தலைமை பெரும்பாக உத்தியோகத்தர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
