நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்க நடவடிக்கை
நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (26.01.2024) நள்ளிரவுடன் நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கவனம்
அதேவேளை, நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்போது, முன்னைய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் அமர்வு நேற்றைய தினம் ஒத்தி வைக்கப்படுவதாக இருந்த போதும் சில காரணங்களினால் அதனை மேற்கொள்ள முடியாமல் போகவே இன்று நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
