வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Uky(ஊகி) Nov 08, 2024 05:41 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கைகளை வடமாகாண சபை ஆரம்பித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் (Northern Province) பிரபல பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு அப்பாடசாலையின் அதிபரால் சேதம் ஏற்படுத்தியதை ஆரம்ப புலன் விசாரணைகள் மூலம் உறுதி செய்து கொண்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல விசாரணைக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே இது சாத்தியமானதாக இதனுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்தக் கோரும் ரணில்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்தக் கோரும் ரணில்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதில் அதிபராக கடமையாற்றி வருபவர் மீதே வடமாகாண சபை தன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

மாகாண நிதி விதியின் கீழ் விசாரணை 

குறித்த பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டு வந்திருந்த பதிலதிபர் மீதான பலமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பழைய மாணவர் சங்கம் மற்றும் நடைமுறையில் உள்ள பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன தொடர்சியாக சுமத்தி வந்திருந்தன.

பதிலதிபரின் ஊழலுக்கு எதிராக வலயக்கல்வி அலுவலகம் துணுக்காய், வடமாகாண கல்வித் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்,கல்வியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றின் ஊடாக எடுத்துரைப்புக்களை மேற்கொண்டிருந்த பாடசாலைச் சமூகம் அந்த பாடசாலையின் அரச சொத்துக்களை பேணிப் பாதுகாப்பதில் தொடர்ந்து போராடி வருகின்றது.

வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை | Action Against School Principal Northern Province

பாடசாலையின் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட நட்டமானது ரூபா 500,000 (ஐநூறு ஆயிரத்திற்கும்) மேற்பட்ட நட்டமாக அமைவதினால் மாகாண நிதி விதி 70க்கு அமைய விசாரணை சபை ஒன்றினை அமைப்பதற்கு ஏதுவாக சபைக்குரிய அங்கத்தவர்களை சிபார்சு செய்து வழங்குமாறு வட மாகாண சபையினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் NP/3/1/GA/06/08/2024 இலக்க 22.08.2024 ஆம் திகதியின் கடிதத்திற்கு பதிலளிக்கும் பதில் கடிதம் NP/09/FRM/R2/06/_ /2024 இன் மூலம் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூர சங்காரம்...!

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூர சங்காரம்...!

கால நீடிப்பு கோரிய அதிபர்

கடந்த மூன்று வருடங்களாக பாடசாலையின் பதிலதிபராக குற்றம் சாட்டப்பட்டவர் கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சானது பதிலதிபரிடம் NP/3/1/GA/06/2/2024 இலக்கமும் 10.08.2024 திகதியிடப்பட்ட குற்றப்பத்திரத்தினை வழங்கி அதற்கு பதிலளிக்குமாறு கோரியிருந்தது.

வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை | Action Against School Principal Northern Province

பதிலளிப்புக்கான சில தேவைகளை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பதினான்கு நாட்கள் போதாது என பதிலதிபர் எடுத்துரைத்துள்ளார்.

பதிலளிப்புக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தனக்கு போதியதன்று என கூறி பதிலளிப்புக்கான கால நீடிப்பினை அதிபர் வலயக்கல்வி அலுவலகம் துணுக்காய் ஊடாக வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரியிருக்கின்றார்.

யாழில் 22 வயது இளைஞன் பொலிஸாரால் கைது..!

யாழில் 22 வயது இளைஞன் பொலிஸாரால் கைது..!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் 

பாடசாலையின் அரச சொத்துக்களை பேணிப் பாதுகாத்து அடுத்தடுத்து பாடசாலையில் கல்வி கற்க வரும் பிரதேச மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

பாடசாலை நிர்வாகங்களை கொண்டு நடத்துவதற்காக நியமிக்கப்படும் அதிபர் அல்லது பதிலதிபர் போன்ற உயர் நிர்வாக அதிகாரிகள் அவற்றை தவறான வழிகளில் பயன்படுத்துவதோடு சேதமடையச் செய்தல், அரச சொத்துக்களுக்கு நட்டமேற்படுத்தல்  போன்ற செயற்பாடுகளை செய்வதால் மாணவர்கள் பாரியளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை | Action Against School Principal Northern Province

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாடசாலையின் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகம் தனது எதிர்ப்புக்களை பலமுறை பதிவுசெய்து வரும் போதும் அதனை அக்கறை கொள்ளாது அசட்டை செய்து கொள்ளும் போக்கினை குறித்த பாடசாலையின்  பதிலதிபர் தலைமையிலான பாடசாலை நிர்வாகம் செய்து வந்திருந்தது.

எனினும் குற்றப்பத்திர தயாரிப்பு மற்றும் அதற்கு பதிலதிபரை பதிலளிக்க கோரியது மற்றும் பதிலளிப்புக்கான கால அவகாசத்தை நீட்டிப்புச் செய்து தருமாறு பதிலதிபர் கோரியிருந்தது போன்ற செயற்பாடுகளை உற்று நோக்கும் போது ஊழலுக்கு எதிரான பாடசாலைச் சமூகத்தின் தொடர்ச்சியான போராட்டங்களை வடக்கு மாகாண சபை கருத்தில் எடுத்து செயலாற்றத் தொடங்கியுள்ளது.

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி

விளைவில் வினைத்திறன் 

இது விரைவாகவும் வினைத்திறனாகவும் இருப்பதோடு இந்த செயற்பாடுகள் முடிவுறுத்தப்படும் வரை பதிலதிபரை மற்றொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யவோ அல்லது வலயக்கல்வி அலுவலகம் துணுக்காயின் உள்ளக செயற்பாடுகளில் ஈடுபடுத்தவோ முயற்சிக்க கூடாது.

முடிவுறுத்தலின் போது குற்றம் நிருபணமாகும் போது இதே பதிலதிபரை தரம் 2 இல் இருந்து தரம் 1 தரமுயர்த்துவதற்கான தேர்சிகளில் வெற்றி பெற அவரை ஈடுபட பணித்து அதே பாடசாலையின் சிறந்த முன்னுதாரணமான ஒரு அதிபரின் வெளிப்படுத்தல்களை வெளிக்காட்டி செல்லவும் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

வடக்கில் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய பாடசாலை அதிபர் மீது நடவடிக்கை | Action Against School Principal Northern Province

அப்போது தான் மீண்டுமொரு முறை அவர் தவறிழைத்துக் கொள்ளும் சூழல் இல்லாத மனநிலை மாற்றம் அவரில் ஏற்படும் என உளவளத்துறை ஆலோசகர்கள் சிலருடன் இது தொடர்பில் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலின் போது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள்.

எனினும் இந்த விடயத்தில் நடைபெறப்போகும் விளைவுகள் தொடர்பில் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீக்கம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US