பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Rukshy
in பாதுகாப்புReport this article
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துமூலமாக அறிவிக்கப்படும்
இதன்படி, நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் 06ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போது அனுமதி பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும், உரிமம் பெற்ற அனைவருக்கும் அறிவிக்க போதிய கால அவகாசம் இன்மையாலும் இதற்கான காலக்கெடுவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதி பெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 13 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
