அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்தக் கோரும் ரணில்
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய சேனவிரத்ன அறிக்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri