மகிந்தவை சீண்ட வேண்டாம்.. அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று இரண்டு சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் தேசிய மக்கள் சக்தியிடம் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், மகிந்த ராஜபக்ச இந்த நாட்டிற்கு சிறந்த சேவையைச் செய்த ஒருவர் என்றும், அவரைப் பாதுகாப்பது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சுதந்திரமாக வாழ அனுமதிக்குமாறும், அவருக்கு தொந்தரவு செய்வதைத் தவிர்க்குமாறும் தற்போதைய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகிந்தவின் இல்லம்
அத்துடன், மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் வீட்டின் செலவுகள் உள்ளிட்ட நிலைமைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டை விட்டு வெளியேறுமாறும் அவர் அவ்வாறு செய்யாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் இந்த வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார்.
இதற்கிடையில், மகிந்த ராஜபக்சவை அந்த நாட்டில் வசிக்க அனுமதிக்குமாறு இரண்டு வெளிநாட்டு நாடுகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
