2025 ஜனாதிபதி தேர்தலிலும் ரணிலை ஆதரிக்கும் மகிந்தவின் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உட்கட்சி தகவல்களின்படி, இந்த விடயம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இன்றுவரை அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஏற்கனவே நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போது, தற்போதைய ஜனாதிபதிக்கே, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ரணில் மீண்டும் ஜனாதிபதி நிலையை விரும்புவாரா?
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை, 2025 ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஆதரிக்கும் யோசனையை, கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் உறுப்பினர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2025க்கு முன்னர் 22ம் திருத்தத்தின் கீழ் நிறைவேற்று
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டால், ரணில் மீண்டும் ஜனாதிபதி நிலையை
விரும்புவாரா? என்பதும் கேள்வியாக உள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
