நீச்சல் போட்டியில் சாதனைப்படைத்த ஊர்காவற்றுறை நம்பாட்டி பாடசாலை
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஊர்காவற்றுறை நம்பாட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் டென்ஸில் ராஜ் 2 தங்கம் -1 வெள்ளி, கனிமுகிலன் 2 தங்கம் 1 வெள்ளி, கனிஷ்ரா 1 தங்கம், யனுஷன் 3 வெள்ளி, நிஷாந்த் 1 வெள்ளி, 1 வெண்க லம். சனுசா 1 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றினர்.
கலப்பு நீச்சல் போட்டி
மேலும், அஞ்சல் நீச்சல் போட்டியில் 14 வயது மற்றும் 16 வயது பிரிவில் ஆண்கள் அணிகள் தலா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்படி போட்டியில் மொத்தமாக 5 தங்கப் பதக்கங்களையும் 11 வெள்ளிப்பதக்கங்களையும், 2 வெண்கல பதக்கங்களையும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
