யாழ். பல்கலையில் விசேட தேவையுடைய மாணவனின் சாதனை
வவுனியாவை சேர்ந்த சிறீதரன் யோகதாஸ், மொழிப்பெயர்ப்பு கற்கைத் துறையில் சிறப்பு கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த முதல் விழிப்புலனற்ற மாணவன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவன், தோலில் ஏற்பட்ட ஒருவித நோய் காரணமாக 17 வயதில் முற்றாக கண்பார்வையை இழந்துள்ளார்.
சிறப்பு கலைமாணி பட்டம்
இவர் யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் உள்ள விழிப்புலன் வலுவிழந்தோரது வாழ்வகத்தில் க.பொ.த உயர்தரக் கல்வியை தொடர்ந்துள்ளார்.
அதனையடுத்து, க.பொ.த உயர்தரப் பரீட்சசையில் 2ஏ மற்றும் 1சி சித்திகளை பெற்ற இவர், மொழிப்பெயர்ப்பு கற்கை துறையை சிறப்புக் கல்வியாக தெரிவு செய்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், மொழிப்பெயர்ப்பு பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர், நடக்கவிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு கலைமாணி பட்டத்தினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri