மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து
மட்டக்களப்பு - காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை - புனானை பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் காத்தான்குடியிலிருந்து பொலனறுவை நோக்கி பயணித்த பேருந்தும் பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் மழையுடனான வானிலை நிலவிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri